இந்த பாலியல் தகவல் உங்களுக்கு தெரியுமா? டாக்டர் தகவல்

458

aankalukku viraippu piracchani, aanmai kurai erpada karanam, ankalin vinthu kaddi aaka, antharanga kelvi, antharangam, Best Sex Positions

ஆண்களை பொறுத்தவரையில் உடலுறவில் ஈடுபடும் போதும், விந்து வெளிப்படும் போதும் இந்த புணர்ச்சி இன்ப நிலையை எட்டுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடியும். ஆனால், பெண்கள் மத்தியில் அப்படியாக இல்லை. பெண்களின் புணர்ச்சி இன்ப நிலையானது கொஞ்சம் வேறுபட்டு காணப்படுகிறது.

வேறுபாடு!

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் புணர்ச்சி இன்ப நிலையை வெவ்வேறு முறையில் அடைகிறார்கள் என்று ஆய்வறிக்கை தகவல்கள் கூறுகின்றன. சிலர் மயக்க நிலையிலும், சிலர் கால்கள் கிறக்கமாகும் நிலையலும், சிலர் வியர்க்கும் நிலையிலும் புணர்ச்சி இன்ப நிலையை எட்டுவாதாக கூறுகின்றனர்.

எப்படி அறியலாம்?

ஆனால், ஒரு பெண் புணர்ச்சி இன்ப நிலையை எட்டிவிட்டாரா? இல்லையா? நிறைவு அடைந்தாரா என்பதை ஒரு முறையில் கண்டறிய முடியும்.

அவரது இதயத்துடிப்பு மேலோங்கும், கடுமையாக அல்லது வேகமாக மூச்சு விடுவார்கள், கருவிழி தளர்ந்து போகும், உடலில் சிறிய அளவில் நடுக்கம் காணப்படும். இதை எல்லாம் வைத்து ஒரு பெண் புணர்ச்சி இன்ப நிலையை அடைந்துவிட்டார் அல்லது தாம்பத்தியத்தில் நிறைவு பெற்றிருக்கிறார் என்று அறிந்துக் கொள்ள இயலும்.

கடுமை!

பல பெண்கள் புணர்ச்சி இன்ப நிலை எட்டுவதில் தாங்கள் கடினமாக உணர்வதாக கருதுகிறார்கள். இதை ஒரு பெரிய பிரச்சனை என்றும் எண்ணுகிறார்கள். ஆனால், இது பெண்கள் மத்தியில் காணப்படும் சாதாரணமான ஒன்று தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இயற்கையாகவே பெண்களின் உடற்கூறு கொஞ்சம் சிக்கலான ஒன்று. சில சமயம் தாங்கள் புணர்ச்சி இன்ப நிலை அடைந்ததை பெண்களே அறிவதில்லை.

என்னென்ன காரணங்கள்?

ஒருவேளை தாம்பத்திய உறவில் ஈடுபடும் முறையானது அல்ல சில வகைகளை அவர்கள் அறியாதிருக்கலாம். துணையின் தீண்டல்கள் முறையற்று இருக்கலாம். சில ஆரோக்கிய நிலை, மருத்துவ நிலை பிரச்சனைகள் காரணமாக கூட தாம்பத்தியத்தில் புணர்ச்சி இன்ப நிலை அடைவது கடினமாக அமையலாம்.

மன அழுத்தம்!

ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலுமே கூட, பெண்கள் மன அழுத்தம், பதட்டமாக இருக்கும் பட்சத்தில் புணர்ச்சி இன்ப நிலை அடைவதில் சிக்கல் கடினம் காணலாம். இப்படியான உணர்வு உள்ளவர்கள் முடிந்தவரை ரிலாக்ஸாக இருக்கும் போது தாம்பத்தியத்தில் ஈடுபட முயலுங்கள்.

ஓரல் செக்ஸ்!

ஓரல் செக்ஸ் என்பது ஃபோர் ப்ளேவில் ஈடுபடும் சமாச்சாரங்கள் ஆகும். 69 போன்ற சில நிலைகளில் பிறப்புறுப்பு இணைப்பு இன்றி தம்பதி தாம்பத்திய உறவில் ஈடுபவை இந்த ஓரல் செக்ஸ்.

அதாவது வாய்வழியாக பிறப்புறுப்பு மற்றும் அந்தரங்க உறுப்புகளை தீண்டுதல். இதன் மூலமாகவும் பால்வினை நோய் தோற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டா என சிலருக்கு சந்தேகம் எழுகிறது.

வாய்ப்புகள் உண்டு!

728×90
பெரும்பாலானவர்கள் எச்.ஐ.வி மட்டுமே பால்வினை நோய் தொற்று என்று தவறாக கருதி வருகிறார்கள். இதுப்போக பல பால்வினை நோய் தொற்றுகள் இருக்கின்றன.

இவற்றில் க்ளெமிலியா, கொனோரியா, மற்றும் சிபிலிஸ் (Chlamydia, gonorrhoea, and syphilis) போன்றவை ஓரல் செக்ஸ் மூலமாக பரவ கூடியவை ஆகும்.

வாய்வழி!

முக்கியமாக வாய் வழியாக துணையின் பிறப்புறுப்புகளை தீண்டுவதால். ஆனால், இத்தகையான ஓரல் செக்ஸ் மூலம் பரவும் பால்வினை நோய் தொற்றுகளை ஆன்டி-பயாடிக் போன்றவரை கொடுத்து குணப்படுத்திவிட முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இரத்தப்போக்கு!

முதல் முறை உடலுறவில் ஈடுபட்டால் இரத்தப்போக்கு ஏற்படும். அதை வைத்து அவர் முன்பே அவர் கன்னித்தன்மை இழக்காதவர் என்பதை அறிந்துக் கொள்ளலாம் என்று சிலர் கருதுவதுண்டு. ஆனால், எல்லா பெண்களுக்கும் முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது இரத்தப்போக்கு ஏற்படாது.

காரணங்கள்!

முக்கியமாக தடகள போட்டிகள், விளையாட்டு போட்டிகள், நடனம் கற்றுக் கொள்பவர்கள், ஏன் அதிகமாக சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கு கூட அவர்களது அன்றாட வேலை காரணமாக கன்னித்திரையானது முன்பே கிழிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இதனால், முதல் முறை உறவில் ஈடுபடும் போது அவர்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

வலி!

திருமணமாக போகும் பெண்கள் பலரிடம் இருக்கும் அச்சம் இது. உடலுறவில் ஈடுபட்டால் வலி ஏற்படுமா? என்ற அச்சம் கொண்டிருப்பார்கள். முதல் முறை ஈடும் போது, பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் எலாஸ்டிக் தன்மை கொண்ட இடம் விரிவடையும் போது கொஞ்சம் வலி ஏற்படும்.

லியூப்ரிகன்ட்!

மேலும், ஒருவேளை பிறப்புறுப்பு பகுதியில் வறட்சியான நிலை இருந்தாலோ, லியூப்ரிகன்ட் பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபட்டாலோ வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை, இந்த எந்த காரணமும் இன்றி வலி ஏற்பட்டால் நீங்கள் தகுந்த மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

முதல் முறை!

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது நிதானமாகவும், போதுமான லியூப்ரிகன்ட் பயன்படுத்தி ஈடுபட்டால் பெரிதாக வலி ஏற்படாது. பொதுவாகவே தாம்பத்தியம் என்பது வலி மிகுந்ததாக இருக்க கூடாது. முதல் முறை மட்டுமல்ல, எப்போதுமே உடலுறவில் ஈடுபடும் போது வலி ஏற்படும் வகையில் ஈடுபட கூடாது.

துணையிடம் கூறுங்கள்!

ஒருவேளை நீங்கள் ஒவ்வொரு முறையும் மிகுந்த வலிக்கு ஆளானால், உங்கள் துணையிடம் வலுவாக ஈடுபட வேண்டாம் என்று தைரியமாக கூறுங்கள். மேலும், சில நிலைகளில் ஈடுபடும் போதிலும் வலி உண்டாக வாய்ப்புகள் உண்டு.

சில மருத்துவ பிரச்சனைகள் இருந்தாலும் வலி ஏற்படலாம். அப்படியான பட்சத்தில் மருத்துவரை சந்தித்து போதுமான பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.