ஆண்களே! உங்க ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

3295

ஆணுறுப்பில் ஒருவித நாற்றம் வீசுவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அப்படி வீசும் நாற்றம் சற்று கடுமையாக இருந்தால், உடனே கவனிக்க வேண்டும். ஏனெனில் ஆணுறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் ஒருசில பிரச்சனைகளின் அறிகுறியாகும். இதில் பெரும்பாலான பிரச்சனைகள் தீவிரமானவை அல்ல மற்றும் எளிதில் சரிசெய்யக்கூடியது.

உதாரணமாக, சுன்னத் செய்யாத ஆண்களின் ஆணுப்பின் மேல் தோலுக்கு அடியில் அழுக்குகள் தேங்கும். அதிலும் மோசமான சுகாதாரத்துடன் இருந்தால், அப்பகுதியில் தேங்கிய அழுக்குகளால் தொற்றுக்கள் ஏற்பட்டு கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சில சமயங்களில் ஆணுறுப்பில் கடுமையான துர்நாற்றம் வீசுவற்கு பாலியல் தொற்றுக்களும் காரணங்களாகும். உங்களுக்கு ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கு எந்த நிலைமைகள் காரணங்களாக இருக்கும் மற்றும் அவற்றின் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து விடுபடும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

ஸ்மெக்மா ஸ்மெக்மா என்பது ஆணுறுப்பின் மேல் தோலுக்கு அடியில் உள்ள பிசுபிசுப்பான திரவமாகும். இது சுன்னத் செய்யாத ஆண்களிடம் பொதுவாக காணப்படும். இந்த ஸ்மெக்மா சற்று துர்நாற்றத்தை உண்டாக்கும். அதிலும் ஆணுறுப்பு பகுதியில் அதிகம் வியர்த்தாலோ அல்லது அப்பகுதியை சுத்தமாக கழுவிப் பராமரிக்காமல் இருந்தாலோ, துர்நாற்றம் சற்று கடுமையாக வீச ஆரம்பிக்கும். இதற்கு அப்பகுதியில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் உள்ளது என்று அர்த்தம். இதனை உடனே கவனித்து சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அப்பகுதியில் அழற்சி அல்லது தொற்றுக்கள் ஏற்பட்டுவிடும்.

என்ன செய்ய வேண்டும்? ஆணுறுப்பில் உள்ள ஸ்மெக்மாவை சுத்தம் செய்வதற்கு, முதலில் ஆணுறுப்பின் மேல் உள்ள தோலை மேல் நோக்கி இழுத்து, அப்பகுதியில் சோப்பு பயன்படுத்தி பின் நீரால் கழுவ வேண்டும். அதன் பின் அவ்விடத்தை துணியால் மென்மையாக உலர்த்த வேண்டும். இவ்வாறு செய்த பின் அவ்விடத்தில் இருந்து வீசிய துர்நாற்றம் போயிருப்பதைக் காணலாம். இந்த முறையை ஒரு நாளைக்கு 2 முறை மேற்கொள்ளுங்கள். இதனால் ஸ்மெக்மா துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்? கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். அவையாவன: * சிவந்து இருத்தல். * வீங்கி இருத்தல். * எரிச்சலுடன் இருத்தல். * ஆணுறுப்பின் மேல் தோலை இழுக்க முடியாத நிலை.

சிறுநீரக பாதைத் தொற்று எப்போது சிறுநீரக பாதையானது பாக்டீரியாக்கள் அல்லது வைரஸால் பாதிக்கப்படுகிறதோ, அப்போது உண்டாகும் நிலை தான் சிறுநீரக பாதைத் தொற்று. பெரும்பாலும் இம்மாதிரியான தொற்றுக்கள் குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளால் வரும். அவையாவன: * பாலியல் செயல்பாடு * சிறுநீர்ப்பையில் இருந்து முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் இருப்பது * சிறுநீரக கற்கள் * புரோஸ்டேட் வீக்கம் * சர்க்கரை நோய் இந்த பிரச்சனைகள் இருந்தால், அதனால் சிறுநீரக பாதையில் தொற்றுகள் ஏற்பட்டு, ஆணுறுப்பில் அழுகிய மீன் துர்நாற்றம் வீசும்.

இதர அறிகுறிகளாவன: * அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், அதுவும் அதிக அளவு சிறுநீரைக் கழிக்காமல் அளவாக வெளியேறும். * சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல். * மங்கலான அல்லது பிங்க் நிற சிறுநீர் வெளியேறுவது. சுன்னத் செய்யாததாலும், சிறுநீரக பாதையில் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சிறுநீரக பாதை தொற்றுக்களை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அதனால் சிறநீரக தொற்றுக்களை உண்டாக்கிவிடும்.

படிக்க தவறாதீர்
இது கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்

Feb 14, 2018
ஆண்களே விந்தணுவில் பிரச்சனையா..? விந்து உற்பத்தியை…

Feb 12, 2018

என்ன செய்ய வேண்டும்? சிறுநீரக பாதை தொற்றுக்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த தொற்றுகளுக்கு மருத்துவர்கள் ஆன்டி-பயாடிக்குகளை பரிந்துரைப்பர். அவற்றை தினமும் தவறாமல் எடுத்து வந்தால், சிறுநீரக பாதை தொற்றுக்களில் இருந்து விடுபடலாம்.

ஈஸ்ட் தொற்று ஈஸ்ட் தொற்றுக்களானது ஆணுறுப்பில் கேண்டிடா என்னும் பூஞ்சையின் கட்டுக்கடக்காத வளர்ச்சியினால் ஏற்படுவதாகும். இந்த பூஞ்சை ஆணுறுப்பில் இருந்தால், ஆணுறுப்பைச் சுற்றி வெள்ளை நிற படலம் பரவியது போன்று காணப்படுவதோடு, பூஞ்சணம் வாசனையைக் கொடுக்கும். இதர அறிகுறிகளாவன: * சிவந்து போதல் அல்லது எரிச்சல். * அரிப்பு. * வெள்ளை நிற படலம் படர்ந்திருத்தல். * அளவுக்கு அதிகமாக ஈரப்பசையுடனும், வெள்ளை நிற திரவம் வெளிவந்தவாறு இருப்பதும்.

என்ன செய்ய வேண்டும்? ஈஸ்ட் தொற்றுக்களானது ஆணுறுப்பை சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதால் ஏற்படுவதாகும். குறிப்பாக சுன்னத் செய்யாத ஆண்கள் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். இந்த தொற்று உள்ளோருடன் உடலுறுவு கொள்வதன் மூலம், இது மற்றவர்களுக்கு பரவும். இதற்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அதனால் அப்பகுதியில் காயங்கள் ஏற்படுவதோடு, தொற்றுக்கள் தீவிரமாகிவிடும். இந்த ஈஸ்ட் தொற்று பிரச்சனையை, மருந்து மாத்திரைகளின் உதவியுடன் சரிசெய்யமுடியும். எனவே உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மொட்டுத் தோலழற்சி (Balanitis) மொட்டுத் தோலற்சி என்பது ஆணுறுப்பின் முனைப் பகுதி மற்றும் மேல் தோலில் ஏற்படும் அழற்சியாகும். இந்த அழற்சியானது குறிப்பிட்ட சில விஷயங்களால் வருவதாகும். அவையாவன: * பாதுகாப்பற்ற உடலுறவு * மோசமான சுகாதாரம் * அதிகமான ஸ்மெக்மா உற்பத்தி * வாசனைமிக்க சோப்புகள் அல்லது பாடி வாஷ்கள் * தொற்றுகள் * சரும பிரச்சனைகளான சொரியாசிஸ் மற்றும் எக்சிமா

இதர அறிகுறிகளாவன: * சிவந்து போதல் * எரிச்சல் மற்றும் அரிப்பு * வீக்கம் * ஆணுறுப்பின் மேல் தோலுக்கு அடியில் அதிக திரவ சேர்க்கை * சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இந்த மொட்டுத் தோலற்சியை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், ஆணுறுப்பின் மேல் தோலின் நுனிப்பகுதி இறுக்கமாகி, பின்வாங்குவதற்கான திறனை இழந்துவிடும்.

மேக வெட்டை நோய் (Gonorrhea) கோனேரியா அல்லது மேக வெட்டை நோயானது பாலியல் தொற்று நோயாகும். இந்த தொற்று உள்ளவர்கள் மற்றவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டால், அது மற்றவர்களுக்கு பரவும். இந்த நோய் ஆணுறுப்பு, மலக்குடல் மற்றும் தொண்டை போன்ற பகுதிகளைத் தாக்கும். மேக வெட்டை நோய் எப்போதும் ஆரம்பத்தில் அறிகுறிகளைக் காட்டாது. அப்படியே காட்டுவதாக இருந்தாலும், அது முதலில் ஆணுறுப்பு பகுதியில் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். தீவிர நிலையில் வேறு பல அறிகுறிகளைக் காட்டும். அவையாவன: * சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் * பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிற திரவம் வெளிவருதல் * ஆணுறுப்பு பகுதியைச் சுற்றி புண், இரத்தக்கசிவு அல்லது அரிப்பு * மலம் கழிக்கும் போது வலி

என்ன செய்ய வேண்டும்? ஒருவருக்கு மேக வெட்டை நோய் இருப்பதற்கான அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். மேலும் மருத்துவர் இந்த நோயைத் தடுக்க ஊசி போடுவார்கள். இந்த நோய் சரியாவதற்கு 7 நாட்கள் ஆகும். மேலும் இதற்கான சிகிச்சை எடுக்கும் போது, உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கிளமீடியா கிளமீடியா என்பது மற்றொரு பாலியல் தொற்றுநோய். இது யோனி, வாய்வழி அல்லது மலப்புழை வழியாக உடலுறவு கொள்ளும் போது பரக்கூடியது. இந்த தொற்று நோய்க்கான அறிகுறிகள் எப்போதும் ஆரம்ப காலத்தில் தெரியாது. ஆனால் இந்த தொற்று சற்று தீவிர நிலையில் இருந்தால், கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அசாதாரண திரவ வெளியேற்றம், விதைப்பை வலி அல்லது வீக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு கிளமீடியா தொற்று இருப்பது போல் உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். பின் மருத்துவர் பரிந்துரைக்கும் ஆன்டி-பயாடிக்குகளை தவறாமல் எடுங்கள். இந்த தொற்று குணமாவதற்கு 7 நாட்கள் ஆகும். இது சரியாகும் வரை உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.