காமத்தில் கட்டில் வித்தை கற்றுகொண்டால் தப்பே இல்லை!

5252

v2.gsm-zona.rum , tamil kamakathaikal , tamil doctor , tamil sex.com , tamil sex tips , antharangam , tamil kamasutra tamilxdoctor , tamil sex doctor , அந்தரங்கம் Antharangam

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்? எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்!

பசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது.
கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.

சினிமாவில், போர்னோ வீடியோக்களில் காட்டப்படும் காமரசக் காட்சிகள் செயற்கையாக எடுக்கப்படுபவைதான். அவற்றில் காட்டப்படுவது உண்மையல்ல என்பதை முதலில் உணர்வது அவசியம். கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். மன உறவு சரியாக இருந்தால்தான் உடலுறவு சரியாக அமையும். வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. கட்டாயமாக உடலுறவு கொள்ள முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும்.

மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும்போது, ரிலாக்ஸாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும். இதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது. செக்ஸ் பற்றிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தயக்கமும் இருக்கக் கூடாது. செக்ஸ் ஓர் உன்னத அனுபவம். பலருக்கும் அதை பொறுமையாக அனுபவிக்கத் தெரிவதில்லை. கடமைக்குச் செய்யாமல் செக்ஸில் அனுபவித்து ஈடுபட வேண்டும். அப்படி செக்ஸில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன…

1) ஃபோர் ப்ளே (Fore Play)
2) ப்ளே (Play)
3) ஆஃப்டர் ப்ளே (After Play)

Fore Play என்பது செக்ஸின் ஆரம்ப நிலை. செக்ஸில் ஈடுபடுவதற்கான Mood, இந்த நிலையில்தான் கிடைக்கிறது. இருவருக்கும் ஒரே நேரத்தில் ‘மூடு’ வருவது அவ்வளவாக சாத்தியமில்லை. யாராவது ஒருவர்தான் உணர்வுகளைத் தூண்டும் வேலையைச் செய்ய வேண்டும். இதழோடு இதழ் சேர்த்து முத்தம் பதிப்பது, காது மடல்களைக் கவ்வுவது, தலைமுடியைக் கோதுவது, கொஞ்சுவது, கால் விரல்களால் மற்றவரின் கால் விரல்களை தடவுவது போன்ற காம விளையாட்டுகள் இதில் அடங்கும்.

இதனால் மனம், உடல், ஜனன உறுப்புகள் கலவிக்குத் தயாராகின்றன. ஆணின் குறி விறைப்புத் தன்மையை அடைவதும், பெண்குறியில் நீர் சுரப்பதும் நடக்கிறது. பெண்குறியில் சுரக்கும் நீர் லூப்ரிகேஷனாக செயல்பட்டு, ஆண்குறி எளிதாக உள்ளே சென்று வர உதவுகிறது. பெண்ணுக்கு எரிச்சல், வலி ஏற்படுவதும் குறையும். பெண்குறியில் சரியாக நீர் சுரக்காவிட்டால் கலவியின் போது வலி ஏற்படும்.

ஆண் Visual Stimulation எனும் காட்சிகளால் கவரப்படுபவன். அழகான பெண்ணைப் பார்த்தாலே அவன் மனம் கொண்டாட்ட நிலைக்கு வந்துவிடும். பெண், Cognitive level எனும் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மட்டுமே கவரப்படுபவள். அதனால், நேரடியாக உறவுக்குச் சென்றுவிடாமல் கதை பேசி, லேசாகத் தீண்டி, உணர்ச்சிகளைத் தூண்டிவிட வேண்டியது அவசியம்.

Play என்பது ஆணும் பெண்ணும் முழுமையான உணர்ச்சி நிலையில் கலவியில் ஈடுபடுவது. இதில் ஏற்படும் உறுப்பு உரசலானது ஆண், பெண் இருவருக்கும் சுகத்தை அளிக்கக் கூடியது. இதில் உச்சக்கட்ட நிலையை அடையும்போது இருவருக்கும் இனம் புரியாத மகிழ்வும் அமைதியும் ஏற்படும்.
After Play என்பது உடலுறவு முடிந்தவுடன் செய்ய வேண்டிய செயல்கள். கட்டிப்பிடித்து, முத்தங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். மனம் விட்டு பல விஷயங்களைப் பேசலாம். இதனால் நல்ல புரிதல் உருவாகும். இந்த நிலைக்குப் பின் தூங்கிவிடாமல் இதமான விஷயங்களைப் பேசிக் களிக்க வேண்டும்!