ஆயுர்வேதம் எட்டு வகைகளாக பிரிகிறது ..அதில் ரசாயனம் (வயதாகாமல் என்றும் இளமையாக இருப்பது )மற்றும் வாஜீகர்ணம் (ஆண்மை பெருக்கும்-முறைகள் -குதிரை போன்று வேகமாக செயல்பட வைக்ககூடிய துறை )..
நாம் இப்போது ரசாயனம் மற்றும் வாஜீகர்ணம் துறையின் உள்ள நுணுக்கங்களை தெரிய இருக்கிறோம்
வாஜீ கரணம் என்றால் என்ன?
- எந்த ஒரு விஷயம் ஒரு ஆண்மகனை -உறவில் குதிரை (stallion ) போல் வீர்யத்தோடு செயல்பட வைக்கிறதோ -அந்த விஷயங்கள் வஜீர்கர்ணம்
- உறவில் பரிபூர்ண திருப்தி பெற வைக்கிறதோ அது வாஜீகர்ணம்
-(சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாட்டு நாலு முதல் ஐம்பத்து ஒன்று வரை )
ஆச்சார்யா வாக்பட்டரின் கூற்றுபடி –
- எந்த ஆண்மகன் -வாஜீ கர்ண சிகிச்சையை மேற்கொள்கிறானோ அவனுக்கு மனதில் உற்சாகம் ,உடலில் பூரிப்பு ,ஆத்மார்த்த சந்தோசம் ,நல்ல குழந்தை செல்வம் ,நல்ல குல பெருமை ,நீடித்த ஆயுள் கிடைக்கும்
- அதுமட்டுமில்லாது அவன் பெண்களால் கவரப்படுவான் ,உறவில் குதிரை போல் வேகமாக உறுதியாக செயல்படுவான் .
யாருக்கெல்லாம் எந்த வாஜீகர்ண சிகிச்சை தேவை படும் ?
- வஜீகர்ண சிகிச்சையின் அவசியம் என்ன ? யாருக்கு ?
- பிறப்பிலிருந்தே உடல் வலு குறைந்தவர்
- உடலுறவு கொள்வதில் வலு குறைந்தவர்
- அதிகமான உடலுறவின் காரணமாக விந்தை அதிகம் இழந்தவர்
- உடலிலும் மனதிலும் -பாலுணர்வில் சோர்வு பெற்றவர்
- நோயினால் -(சர்க்கரை நோய் மற்றும் பல ) பாதிக்கபட்டு உடல் பல்ஹீனமானவர்
- அதிக பெண்களை மனைவியாக பெற்றவர்
- இயற்கையாக தாதுக்களின் நஷ்டம் பெற்றவர்
- பலம் குறைந்த காலம் ,பலம் குறைக்கவைக்கும் தேசத்தில் உள்ளவர்
- அதிக சந்தோஷத்தை அடைய விருப்பமானவர்
(சரக சம்ஹிதை -இரண்டாவது அத்தியாயம் -மூன்றிலிருந்து பத்து வரை உள்ள பாட்டில் )
வாஜீகர்ண சிகிச்சை பெற தகுதியானவன் யார் ?
- குழந்தை இல்லாதவர்
- விந்து தாது குறைந்ததால் பலம் இழந்தவர்
- உடலுறவு கொள்ள சக்தி இல்லாதவர்
- உடலுறவு -பாலுணர்வே இல்லாதவர்
- ஆண்மை இழந்தவர்
- என்றும் இளமையாக வாழ நினைப்பவர்
- அதிக வசதி படைத்தவர் (பணக்கார )
- தன் இச்சைகளை அடக்க தெரிந்தவர்
வாஜி கர்ண சிகிச்சை பெற தகுதியில்லாதவன் யார்
- சமூகத்தில் -தகாத குணம் உள்ளவன் -அனாத்மா
- பதினாறு வயதிற்கு குறைந்தவன் -எழுபது வயதிற்கு மேலுள்ளவர்கள்
- அதிக காம இச்சை கொண்ட-நல்ல எண்ணம் இல்லாதவன்