ஒலடிப்பதில் இருமடங்காக செயட்பட விருப்பமா?

1778

கொஞ்சம் முத்தம் கொடுத்துவிட்டால் எல்லாம் ஜோராக நடக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை! ஃபோர்ப்ளே என்பது பெரிய அளவில் உணர்வைத் தூண்டும் செயல்பாடு, அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவோ புறக்கணிக்கவோ கூடாது. அது ஏன் முக்கியம் என்று பார்ப்போம்.

உடலுறவின் நேரத்தை இரண்டு மடங்காக்கும் (Double the time)

பொதுவாக ஆண்கள் பாலியல் கிளர்ச்சி அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் பெண்களுக்கு அதிக நேரமாகும். உடலுறவு வலியற்றதாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டுமானால் பெண்ணுறுப்பில் போதிய வழவழப்புத் தன்மை இருக்க வேண்டும்.

இதற்கு ஃபோர்ப்ளே பெரிதும் உதவுகிறது. ஃபோர்ப்ளே செய்வதால் பெண்கள் உடலுறவில் ஐக்கியமாவதற்கும் பாலியல் கிளர்ச்சி அடைவதற்கும் அவர்களின் உடல் பாலியல் எதிர்வினை புரிவதற்கும் கூடுதல் நேரம் கிடைக்கிறது.

ஒரே வித்தை எல்லோருக்கும் ஒரே மாதிரி பலன் தருவதில்லை (One trick doesn’t work for all)

உங்கள் துணையின் உடலின் புதுப்புதுப் பகுதிகளைத் தூண்டி பரவசப்படுத்தத் தயங்காதீர்கள். உங்கள் துணைவருக்கு என்ன பிடிக்கிறது என்ன பிடிக்கவில்லை என்பதையெல்லாம் அறிந்துகொள்ளவும் ஃபோர்ப்ளே உங்களுக்கு நேரம் கொடுக்கிறது. புதியவற்றை முயற்சி செய்து பார்க்கத் தயங்கவேண்டாம். அவர்களின் உடல்மொழி மற்றும் முனகல் சத்தங்களைக் கொண்டு அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

படுக்கையறைக்கு வெளியே (Outside the bedroom)

எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உங்கள் துணைவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். அவரது மனதைத் தூண்டுங்கள், முத்தமிடுங்கள், கோதிவிடுங்கள், இன்னும் ஏதோதோ செய்யுங்கள். இதெல்லாம் அவரது மன அழுத்தத்தைப் போக்க உதவும். வேறென்ன வேண்டும். இதையெல்லாம் அவர் மகிழ்ச்சியாக அனுபவித்தால் நிச்சயம் அவரது க்ளைமேக்சையும் விரும்புவார்.

நீண்ட கால உறவுகளிலும் ஃபோர்ப்ளே என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. அது படுக்கையறைக்கு வெளியேயும் உங்கள் துணையுடன் இருக்கையில் ஒரு அற்புதமான மகிழ்ச்சி உணர்வைக் கொடுக்கும்.

முக்கியமானது – நெருக்கம் (The all-important connect)

ஃபோர்ப்ளே பெண்ணுறுப்புக்கு போதுமான வழவழப்பை வழங்குவதுடன் தம்பதியரின் நெருக்கத்தையும் அதிகப்படுத்துகிறது. இதைச் செய்யும்போது இருவருமே திருப்தியடைகிறார்கள் என்பதுதான் முக்கியம். இருவருமே திருப்தியடையும்போது உறவும் மகிழ்ச்சிகரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உடலுறவின் நோக்கம் புணர்ச்சிப் பரவசநிலை (ஆர்காசம்) என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கும் மேலே சில விஷயங்கள் உள்ளன. உடலுறவு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க நல்ல ஃபோர்ப்ளே உதவுகிறது. உங்கள் துணைவருடன் கொஞ்சி விளையாட நேரம் செலவழிக்காமல் அவசரமாக வேலையை முடித்துவிடுவதில் அர்த்தமே இல்லை!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ விவரங்கள் தகவலுக்காக மட்டுமே.

உடல்நலம் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுக்கும் முன் அல்லது குறிப்பிட்ட மருத்துவ நிலை பற்றிய வழிகாட்டலுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.