தினமும் உங்கள் கட்டிலில் இன்ப தீண்டல்கள் வேண்டுமா ?

490

முதலில், பெண்ணுடன் ஆண் தினமும் கூடிப்பழகும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் கலவி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் முன் விளையாட்டு, முத்தம், கிள்ளுதல் என்று அன்பை பல்வேறு வழிகளில் காட்டத் தெரிந்தவனாக ஆண் இருக்க வேண்டும்.

ஆணின் மனம் அறிந்தவளாக பெண் இருக்க வேண்டியதும் முக்கியம். கலவியில் ஆண் ஆர்வமாக இருக்கிறான் என்பதைப் பார்வையில் அல்லது செய்கையில் அறிந்து அவனது ஆசையைத் தீர்த்துவைப்பவளாக இருக்க வேண்டும்.

இருவரது மனமும், செயலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டியது அவசியம். ஆண்-பெண் இருவருடைய உள்ளத்திலும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்புதான் மேலோங்கி இருக்க வேண்டும்.

இருவருக்குள்ளும் காதல் பொங்கி வழிய வேண்டும். தன்னுடைய இன்பத்தைவிட, தன் இணையின் இன்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்துபவர்களாக இருவரும் இருத்தல் வேண்டும்.

இறுதியாக, ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் கலவியில் இன்பம் அனுபவிக்கத் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

ஒருவர் மட்டுமே இன்பம் அனுபவித்தால் போதும் என்ற சுயநலமின்றி செயல்படும் பட்சத்தில், இருவரும் ஒன்று சேர்ந்து இன்பம் அனுபவிப்பதை ஒரு கலையாகவே இருவரும் கற்றுக்கொள்ள இயலும்.

ஒருவேளை ஒருவர் முன்னதாகவே இன்பம் அனுபவித்தாலும், அடுத்தவர் இன்பம் அனுபவிக்கும் வரை கலவியைத் தொடரத் தெரிந்தவராக இருத்தல் அவசியமாகும்.

இப்படி படுக்கை அறையில், ஆணும் பெண்ணும் ஈருடல் ஓருயிராக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் எவ்விதத்திலும் சண்டை, சிக்கல் வர வாய்ப்பு இல்லை. அவர்கள் வாழ்வு சிறப்பாகவே இருக்கும்.

குடும்பம் அன்புமயமாகத் திகழும்.

அன்பில்லாத வாழ்வு ஆண்-பெண் இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லுதல், சந்தேகப்படுதல், முழுமையான இன்பம் கிடைக்காமல் எவரேனும் ஒருவர் மட்டும் திருப்தி அடைதல் போன்றவை இருக்கும்பட்சத்தில் தம்பதியர் வாழ்வில் வெறுமைதான் முக்கியம் இடம் பிடிக்கும்.

தானாக வலிய வந்து ஆண் அல்லது பெண், கலவிக்கு அழைத்தாலும், ஏதேனும் காரணம் சொல்லி தட்டிக்கழிப்பது பெரும் இடைவெளிக்குக் காரணமாகிவிடும்.

கலவிக்கு ஆர்வமாக இருக்கும் இணையின் ஆசையை ஒரு பொருட்டாகக் கருதாமல் தூங்குவது, உடல் சரியில்லை என்று பொய்க்காரணங்கள் சொல்வது எல்லாமே வாழ்க்கையை வெறுமையை நோக்கி விரட்டிவிடும்.

ஆனாலும், ஆண் அல்லது பெண் அதிகக் களைப்படைந்திருக்கும் நேரத்தில், அதிக போதையுடன் இருக்கும் நேரத்தில், உடல் நலம் இல்லாமல் இருக்கும்போது கலவிக்கு அழைத்தல் கூடாது.

அந்த நேரத்தில் கலவிக்கு அழைப்பதைத் தவிர்ப்பதுதான் சிறப்பானதாகும்.

ஏனெனில், உடல் பாதிக்கப்பட்டவரால் கலவியில் முழுமையாக ஈடுபட்டு, தன்னுடைய இணைக்குப் போதிய இன்பம் தர முடியாமல் போகும்.

கலவியைப் பொறுத்தவரை, புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது, ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்குக் குறைந்த காலமாகவும் இருக்கும்.

பிறகு நாளாக நாளாக, அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால், ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும். பெண்களுக்கு போக காலம் குறைந்துகொண்டே வரும் என்பது அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விஷயமாகும்.

எவ்வித மருந்தும் இல்லாமல் ஆண்களால் கலவிக் காலத்தில் போகத்தை நீடிக்க எளிதான வழி உண்டு.

அதாவது, சேரும் நேரத்தில் மனத்தை முழுமையாக அந்தச் சுகத்தின் மீது செலுத்தாமல், வேறொன்றின் மீது செலுத்தி, அறிவுடன் உணர்வையும் அடக்கி, நிதானமாகப் பெண்ணுடன் சேர வேண்டும்.

விரல்களால் கலவியை மேற்கொள்ளும்போது, பெண்களை உச்சத்தின் அருகே வரவழைத்துவிட முடியும்.

இதனால், விரல் விளையாட்டின் மூலமே பெண்ணுக்குக் காம இச்சை மிகுந்து காம நீர் பெருகத் தொடங்கும்.