உடலுறவில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்!!!

1348

இயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவதிலும், பரவச நிலையை எட்டுவதிலும் பின்தங்கி தான் இருப்பார்கள். ஆண்கள் தான் அவர்கள் உச்சம் அடைய உதவ வேண்டும்.
பெண்கள் உச்சம் அடைவதில் பின்தங்கி இருப்பதற்கு இது மட்டுமே காரணம் இல்லை. பல பெண்கள் இயற்கையாக உடலுறவுக் கொள்ளும் போது அவர்கள் உச்சம் அடைவதும், அந்த உணர்வும் தவறானது என்று எண்ணுகின்றனர்.

இந்த நிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையேல் உடலுறவுக் கொள்வதில் பிரச்சனைகள் எழும். உச்சம் அடையாமல் உடலுறவுக் கொள்ளும் போது ஆண், பெண் இருபாலரும் முழு இன்பத்தை எட்ட முடியாது.

சரி, இனி பெண்கள் உச்சம் அடையாமல் இருப்பதற்கு என்னென்ன காரணங்கள் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்…
பெண்களில் பெரும்பாலானவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினாலும், அதைப் பற்றி அறிந்துக் கொள்வது தவறு என நினைக்கின்றனர். மேலும், அதைக் கற்றுக் கொள்ளவும் தயக்கம் காட்டுகின்றனர். இந்த தயக்கம் தான் பெண்கள் உடலுறவில் உச்சம் அடையத் தடையாக இருக்கின்றது.

பெண்கள், உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைந்தால் அவர்கள் பெண்களே அல்ல, காமப் பேய்கள் என்பது போல ஒரு பிம்பத்தை தங்கள் மனதினுள் வரையறுத்து வைத்துள்ளனர் பெண்கள்.

சில பெண்கள் உச்சம் அடைவது வேண்டாத விஷயம் என நினைக்கின்றனர். மற்றும் அவர்களது துணையே அவர்களுக்கு விரும்பியவாறு தங்களை அனுபவிக்கட்டும் என்று சிலர் அசால்ட்டாக விட்டுவிடுகின்றனர்.

வேலை தெரிவதில்லை…

உடலுறவில் உச்சம் அடைவது என்பது ஆணும், பெண்ணும் கட்டித் தழுவிக் கொண்டவுடனே நிகழும் விஷயமல்ல. கொஞ்சிக் குலாவுதல், அள்ளி நகையாடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டும். ஆனால், பெண்களோ இந்த வேலைகளை ஈடுபட விரும்புவது இல்லை.

பெண்கள் அவர்களது பெண்ணுறுப்பு வாயுளாக உச்சம் அடையத் தூண்டப்படுவதை தவறான விஷயமாகக் கருதுகின்றனர். அவ்வாறு செய்யும் ஆண்களையும் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதுவும் ஒருவகையில் அவர்கள் உடலுறவில் உச்சம் அடையாமல் போகக் காரணமாக அமைகிறது.

உடலுறவு என்பது நூடுல்ஸ் அல்ல இரண்டு நிமிடத்தில் சமைத்து முடிப்பதற்கு, அறுசுவை உணவைப் போன்றது. அதன் முழு சுவையை ருசிக்க சில மணி நேரங்கள் ஆகும். ஆனால், பெண்கள் உடலுறவில் அதிக நேரம் செலவிட விரும்புவதில்லை.

உச்சம் அடைய நேரம் ஆகும் என்பதை பெண்கள் உணர்வதில்லை. தங்களுக்கு ஏதோ குறை உள்ளதை போல நினைத்து மனதினுள் புலம்புகின்றனர். இந்த எண்ணங்கள் நிஜமாகவே அவர்களை உடலுறவில் உச்சம் அடையவிடாமல் தடுக்கிறது.

அதிர்ச்சி

பெண்கள் பிறவியிலேயே மென்மையானவர்கள், வலியை தாங்க இயலாதவர்கள். முதன் முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டிப்பாக வலி ஏற்படும். அந்த வலியின் அதிர்ச்சியில் இருந்து பெண்கள் மீள்வதில்லை. அடுத்த முறை உடலுறவில் ஈடுபடும் போதும் முன்பு ஏற்பட்ட வலியை நினைத்து பயப்படுகின்றனர்.

தங்களது முகம் உடலுறவுக் கொள்ளும் போது எவ்வாறு இருக்கும், மற்ற உடல் பாகங்கள் எப்படி தெரியுமோ என தங்களது உடல் தோற்றம் பற்றிய அச்சத்தின் காரணமாகவே சில பெண்களுக்கு உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடையமால் போகின்றனர்.

சில பெண்கள் தாங்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவோமா? மாட்டோமா? என்ற கவலையில் மூழ்கிவிடுகின்றனர். இதுவே, அவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது உச்சம் அடையாமல் போக காரணமாக இருந்துவிடுகிறது.