வெளிய போடா தண்டசோறு! மட சாம்பிராணி!

12114

ஆள் நடமாட்டமேயில்லை! அது சரி! மண்டை பிளக்கும் சென்னை K.k. நகர் வெய்யிலில் இந்த பார்க்கிற்கு யார் வரப்போகிறார்கள். அவர்களுக்கு என்ன தலையெழுத்தா! கை கடிகாரத்தை பார்த்தேன் . மணி 3.45. பார்க்கின் உள்ளே போகலாமா ..இல்லை வாசலிலேயே நிற்கலாமா என்று முடிவு எடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தேன்.

ஜஸ்ட் எ மினிட்.. என்னை பற்றி.. நான் ராகேஷ் குமார். வயது 24. நல்ல உயரம். தலையில் நிறைய முடி.. ஆனால் கொஞ்சம் அறிவு (இது என் அப்பா அடிக்கடி சொல்வது!). உங்கள் பக்கத்து வீட்டில் அடிக்கடி நீங்கள் பார்க்கும் இளைஞர்களை போல இருப்பேன் நான். தொழில் அதிபரான என் அப்பா சஞ்ஜீவ் குமாருக்கு ஒரே வாரிசு! இப்போதுதான் நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன். வந்து நாலு மணி நேரம்தான் ஆனது.திரும்ப வீட்டுக்கு போக கூடாது என்பது என் இப்போதய தீர்மானம்

ஏன்.

இந்த அப்பாவிற்கு வேறு வேலையில்லை, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒரு தொழிற்சாலையை கட்டிவிட்டு அதை மேனேஜ் செய், அதை பார், இதை செய் என்று ஒரே அட்வைஸ்.. நோ என்றால் தண்டசோறு, தீவட்டி தடியன் என்று ஒரே பட்டப்பெயர் வழங்கல். அதான் வீட்டுக்கே வருவதில்லை என்று வந்து விட்டேன். வந்த பிறகுதான் தெரிகிறது ஒரு நாளைக்கு கூட காலம் ஓட்ட முடியாது என்று. பேசாமல் வீட்டுக்கு போகலாமா என்றால் சுய கௌரவம் தடுக்கிறது.

அப்போது சர்ர்ர்ர்ர் என்று ஒரு கார் வந்து நின்றது.

“ஹாய் சுரேஷ்” என்று கார் கதவை திறந்தபடியே ஒரு குரல்.

நிமிர்ந்து பார்த்த நான் அசந்து விட்டேன். ஒரு அழகு தேவதை முன்னால் நின்றுக்கொண்டு இருந்தது. நல்ல ஆறு அடி உயரம். வயது 19 அல்லது 20 இருக்கும்.ரத்த சிவப்பு சாரி கட்டி இருந்தாள். அவள் நல்ல சிவப்பு. சின்னதாக கொண்டையிட்டு இருந்தாள். தலையின் ஓரத்தில் ஒரு ரோஜா பூ. லேசாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். உதடுகளில் லேசான ப்ளாஸ்டிக் புன்னகை..ஒற்றை செயின், பெரியதான காது வளையம், கறுப்பு லெதர் ஸ்ட்ராப் வாட்ச்.

இந்த சிவப்பு சாரியில் அவள் அழகு மேலும் பிரகாசித்தது. சாரியில் முழுதும் சிறிய , சிறிய பூக்கள். அதே கலரில் ப்ளவுஸ் அணிந்து இருந்தாள். கை வைக்காத பளவுஸ் அவள் மார்பு கலசங்களை அடக்க முயன்று முடியாமல் மேலிருக்கும் பிளவை காட்டியது. அவள் உதடுகள், கன்னங்கள். கழித்து எல்லாம் வர்ணிப்பது என்றால் ஒரே வார்த்தை இளமை, இளமை, இளமை..

யார் இது ஆறு அடி சந்தனகட்டை என்று திணறினேன்.

“என்னடா முழிக்கறே” என்றாள்.

டா போட்டு பேசறாளே.. ஒரு வேளை நம்முடன் ஸ்கூலில் படித்தாளோ? இருக்காதே..கூட படிக்கும் பெண்ணை பார்க்காதவன் இல்லையே நான்..என்று மனம் மாரத்தான் ரேஸில் ஓடியது.

“என்னை விட்டு விட்டு எங்கடா போயிட்டே” என்றது அந்த நைஸ் நைன்டீன்..

அவள் அப்படி கேட்டவுடன் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.இது ஏதோ ஆள் மாறாட்ட கேஸ்.. என்றது மனம்.
“வந்து யார் நீங்கள். உங்களை எனக்கு தெரியாதே” என்று இழுத்தேன்.

“அடப்பாவி! தெரியாதா. நான் சுஜிதா கல்லூரியில் இழைந்து, இழைந்து என் கன்னத்தில் பாதி எடுத்து விட்டு அன்று மகாபலிபுரத்தில்.” என்று அநியாயத்துக்கும் வெட்கப்பட்டாள்.

சு..ஜி..தா! என்ன அருமையான பெயர். ஆனால் இவள் யாரென்றே தெரியவில்லை. நானாவது இவளுடன் மகாபலிபுரத்தில் ரூம் போட்டாவது? சரியான செமி! கிராக்கு என்று மனம் திட்டினாலும் அவள் அழகு என்னை கட்டிப்போட்டதென்னவோ உண்மை. ஆஹா..என்ன நைஸ் பெண்! அந்த அழகு முகத்தை பார்த்தவுடன் மனம் இறக்கை கட்டி பறந்தது. மனம் அவளை பல போஸில் கிளிக் செய்தது.

அப்போது என் கையை பிடித்து இழுத்தாள்.

“ம்ம் உள்ளே வா” என்று அருகிலிருந்த காரின் கதவை திறந்தாள்..

யோசித்தேன். நமக்கோ எங்கே போவது என்று தெரியவில்லை! போய்தான் பார்ப்போமே. ஒரு மூன்று நாள் பார்க்கலாம். பிடிக்கவில்லை என்றால் ஓடி வந்து விடலாம்.

மெதுவாக ஏறி காரில் அமர்ந்துக்கொண்டேன். கார் வேகமாக போரூர் நோக்கி பயணித்தது.

கார் பயணித்து ஒரு வீட்டுக்குள் சென்றது. வீட்டுக்குள் சென்றோம். கதவை ஒரு வயதானவன் திறந்தான்.

அந்த வீடு பெரிய தோட்டத்தின் நடுவே இருந்தது. ஒரு பெரிய ஹால்..வாசலில் மாருதி கார், உள்ளே விசாலமான ரூம்கள், மேலே பெரிய கண்ணாடி சேண்டிலியர்.வீடு ஆடம்பரமாக இருந்தது.

“வாங்க சார்! இன்று நீங்களா” என்றான் சலிப்போடு!

சுஜிதா! நேரடியாக தன் ரூமிற்கு சென்றாள். நான் அந்த ஹாலில் உட்கார்ந்தான். அவனை பார்த்தேன். வயது ஒரு 60 இருக்கலாம். வேலைக்காரன் போலுள்ளது.

“அப்படினா ஏன் ரொம்ப பேர் வருவாங்களா” என்றேன்..

“ஐயோ சார்! நான் அப்படி சொல்லல. இந்த அம்மா ஒரு பையனை காதலிச்சு இருக்கு! அந்த பையன் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இந்தம்மா பார்க்கும்போதே அடிபட்டு செத்திருக்கான். எப்பவாவது அவன் ஜாடைல இருக்கிறவங்களை அழைச்சிட்டு வருவாங்க! அப்புறமே அந்தம்மாவுக்கு சுய புத்தி வந்து ஒரு ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து அனுப்பி விடுவார்கள்” என்றான்.
வயிற்றை பசி கிள்ளியது.. பேசாமல் இன்று இரவு இங்கு காலம் தள்ளிவிட்டு காலையில் ஓடி விடலாமா? மனம் வெகுவாய் யோசித்தது. அடச்சீ ஒரு தொழில் அதிபர் மகன் இதற்கு ஆசைப்படுவதா என்றும் மனம் பேசியது.

நான் கிளம்ப எத்தனித்தேன்.

“ஐயோ சாரே.. இப்ப போயிடாதீங்க! போனால் அழுது ரகளை பண்ணீடுவாங்க சார். காலையில் போயிடுங்க” என்று அவன் கெஞ்சிக்கொண்டு இருக்கும்போது சுஜிதா நைட்டியில் அழகாக வந்தாள்.

வந்தவள் அவனை ஆக்ரோஷமாக பார்த்தாள். அவன் அதை பார்த்துக்கொண்டே கதை திறந்து வெளியே சென்றான்..

“அவன் சரியான கிராக்கு! லவ்வர்ஸ் எவ்வளோ பேசிப்பாங்க! குறுக்கே நிக்கறான் பார்”

அடிப்பாவி. அவன் கிராக்கா! நீ கிராக்கா! என்றது மனம்.

“சரி வா உள்ளே போகலாம்” என்றாள். நான் அவள் வாலை பிடித்துக்கொண்டு உள்ளே போனேன்..